ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதிக்கலாம் - முதல்வர்

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதிக்கலாம் - முதல்வர்

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதிக்கலாம் - முதல்வர்

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதிக்கலாம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஸ்டெர்லைட்டில் 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கலாம் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

“ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது அரசின் நோக்கமல்ல; நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. எனவே ஸ்டெர்லைட்டில் 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கலாம். ஆக்சிஜன் உற்பத்தி உள்ளூர் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு அமைத்து கண்காணிக்கப்படும்” என்று அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் பேசியபோது முதல்வர் பழனிசாமி கூறினார்.

அரசின் இந்த முடிவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார். அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை அனுமதிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். எக்காரணம் கொண்டும் ஆலையை இயக்க ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு அனுமதி தரக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com