'திமுக எம்பிக்கள் உதவ வேண்டும்' - முதல்வர் பழனிசாமி கோரிக்கை

'திமுக எம்பிக்கள் உதவ வேண்டும்' - முதல்வர் பழனிசாமி கோரிக்கை

'திமுக எம்பிக்கள் உதவ வேண்டும்' - முதல்வர் பழனிசாமி கோரிக்கை
Published on

திமுக எம்பிக்கள், நாடாளுமன்றத்தில் பேசி தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை நீக்க உதவ வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் பேசினார்.

திமுக சட்டமன்ற உறுப்பினர் சுந்தரம், உத்தரமேரூர் தொகுதியில், காலம் முடிந்த பிறகும், சில சுங்கச்சாவடிகள் மக்களிடம் பணம் வசூலித்து வருவதாகவும், அவற்றை அகற்ற வேண்டும் என்றும் கூறினார். 

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுகவை சேர்ந்தவர் அமைச்சராக இருந்தபோதுதான் சுங்க சாவடிகள் வந்தன எனக் கூறினார். திமுகவில் அதிக எண்ணிக்கையில் எம்பிக்கள் இருப்பதாக பெருமை பட்டுக் கொள்ளும் நிலையில், தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பேசி உதவ வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com