\
பட்டு வளர்ச்சியில் முதலிடம் பிடியுங்கள் - விவசாயிகளுக்கு முதல்வர் வேண்டுகோள்

பட்டு வளர்ச்சியில் முதலிடம் பிடியுங்கள் - விவசாயிகளுக்கு முதல்வர் வேண்டுகோள்

பட்டு வளர்ச்சியில் முதலிடம் பிடியுங்கள் - விவசாயிகளுக்கு முதல்வர் வேண்டுகோள்
Published on

அரசு வழங்கும் ஆலோசனைகளை பின்பற்றி விவசாயிகள் பட்டு வளர்ச்சியில் தமிழகத்தை முதலிடத்திற்கு முன்னேற்ற வேண்டும் என முதல‌மைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். 

சேலத்தில் ஊடக தொழில் வளர்ச்சி துறையின் சார்பில் பட்டு விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோருக்கான கண்காட்சி அற்றும் கருத்தரங்கை பழனிசாமி தொடங்கிவைத்தார். முன்னதாக கூட்டு பண்ணைகள் திட்டத்தின் கீழ் 31 விவசாய குழுக்களுக்கு ரூ.1.55 கோடி மதிப்பிலான வேளான் உபகர‌ணங்களை வழங்கினார். மேலும் ரூ.4.14 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர், 14.40 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பட்டு வளர்ப்பு கையேடு மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் கையேட்டையும் அவர் வெளியிட்டார். 

பின்னர் விழாவில் உரையாற்றிய அவர், பட்டு தொழில் வளர்ச்சியில் மத்திய, மாநில அரசுகள் ரூ.148 கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாகவும், தமிழகத்திற்கு பட்டு நூல் தேவை என்றும் கூறினார். இந்திய அளவில் கச்சாப்பட்டு உற்பத்தில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது என்றும், அரசின் ஆலோசனைகளை பின்பற்றி விவசாயிகள் பட்டு உற்பத்தியில் முதலிடத்திற்கு முன்னேற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com