\
முதல்வர் பழனிசாமியுடன் டிஜிபி, தலைமைச் செயலாளர் சந்திப்பு

முதல்வர் பழனிசாமியுடன் டிஜிபி, தலைமைச் செயலாளர் சந்திப்பு

முதல்வர் பழனிசாமியுடன் டிஜிபி, தலைமைச் செயலாளர் சந்திப்பு
Published on

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக காவேரி மருத்துவமனையின் அறிக்கை இன்னும் சில நிமிடங்களில் வர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, முதலமைச்சர் பழனிசாமியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அழகிரி ஆகியோர் அவரது இல்லத்தில் சந்தித்தனர். சுமார் 20 நிமிடங்கள் சந்திப்பு நீடித்தது. கருணாநிதியின் உடல்நிலை குறித்து முதல்வரிடம் பேசியதாக தெரிகிறது. இந்தச் சந்திப்பின் போது, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முதல்வர் உடனான சந்திப்பு பின்னர் அங்கிருந்து ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வந்தனர். அதேபோல், காவேரி மருத்துவமனைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திமுக மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், ஜெகத்ரட்சகன் வந்தனர்.  சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் காவேரி மருத்துவமனை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமியுடன் டிஜிபி ராஜேந்திரன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சந்தித்துள்ளனர். ஸ்டாலின் உடனான சந்திப்புக்கு பிறகு இது நடைபெற்றுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com