\
மே 2-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம் : ஊரடங்கு நீட்டிப்பா ?

மே 2-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம் : ஊரடங்கு நீட்டிப்பா ?

மே 2-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம் : ஊரடங்கு நீட்டிப்பா ?
Published on

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் மே 2ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. இதுவரை சென்னையில் 673 பேர் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு இப்படி உயர்ந்துகொண்டே இருக்க, வரும் ஞாயிறுடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரவுள்ளது.

இந்நிலையில், மே 2ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், சென்னையின் கொரோனா பரவல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படலாம் எனப்படுகிறது. கூட்டத்திற்கு பின்பு ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கட்டுப்பாடு தளர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் எனப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com