தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி - தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி
தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசின் சார்பில் கல்வி தொலைக்காட்சியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். அதன்படி, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், கல்வி தொலைக்காட்சி அலுவலகம் செயல்பட உள்ளது. 53 ஆயிரம் பள்ளிகளில் இந்தக் கல்வி தொலைக்காட்சியை ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கல்வியாளர்களின் கலந்துரையாடல், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் இதில் ஒளிபரப்பப்படும்.
மழலையர் தொடங்கி முதல்நிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான நிகழ்ச்சி வரை ஒளிபரப்பாக உள்ளது. ஒழுக்கம், பெரியோர்களை மதித்தல், நேரம் தவறாமை, நற்பண்புகளை கொண்ட கதைகள் தொலைக்காட்சியில் இடம்பெறும். தமிழ், ஆங்கில மனப்பாடப் பகுதிகள், இசை, பாடல்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.