மதுரையில் நடைபெற்ற இளைஞர் பெருவிழாவில் பங்கேற்ற முதலமைச்சர் பழனிசாமி, நிகழ்ச்சிக்கு பின் இளைஞர்களுடன் அமர்ந்து மதிய உணவு அருந்தினார்.
மதுரையில் நடைபெற்ற இளைஞர் பெருவிழாவில் பங்கேற்ற முதலமைச்சர் பழனிசாமி, மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், கருவுற்ற பெண்களுக்கு தமிழக அரசு சிறப்பான பல்வேறு உதவிகளை செய்து வருவதாகவும் கூறினார். நாட்டிலேயே தமிழகத்தில் மட்டுமே அதிக எண்ணிக்கையிலான கல்வி நிறுவனங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக இளைஞர் பெருவிழாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டு களித்தார். நிகழ்ச்சியின் பின்னர், இளைஞர்களுடன் அமர்ந்து முதலமைச்சர் பழனிசாமி மதிய உணவு அருந்தினார்.