தேசிய போட்டிகளில் வென்ற தமிழக வீரர்கள்: ரூ.79 லட்சம் ஊக்கத்தொகை

தேசிய போட்டிகளில் வென்ற தமிழக வீரர்கள்: ரூ.79 லட்சம் ஊக்கத்தொகை

தேசிய போட்டிகளில் வென்ற தமிழக வீரர்கள்: ரூ.79 லட்சம் ஊக்கத்தொகை
Published on

தேசிய போட்டிகளில் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.79 லட்சம் காசோலையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் தமிழக வீரர்கள் பலர் சாதனை படைத்து வருகின்றனர். வெற்றி பெற்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி ஊக்கத் தொகை வழங்கி‌னார். இதில் கடந்த 2015ஆம் ஆண்டு கேரளாவில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த 20 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.79 லட்சம் காசோலை வழங்கப்பட்டது. இதேபோன்று வீரர்களின் பயிற்சியாளர்கள் 17 பேருக்கும், ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ.11.85 லட்சம் வழங்கப்பட்டது. பின்னர் வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்த முதலமைச்சர், மேலும் சிறப்பாக விளையாடி நாட்டிற்கு பெருமை தேடித்தர வேண்டும் எனக் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com