குடியரசுத் தலைவர், பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி தீபாவளி வாழ்த்து
குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோருக்கு, தனித்தனியே மலர்கொத்துடன் தீபாவளி வாழ்த்துக் கடிதத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ளார். அமைதியும், வளமும், நல்ல உடல் நலமும் பெற தீபாவளி நன்னாளில் வாழ்த்து தெரிவிப்பதாக அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமிக்கு, ஆளுநர் நன்றி தெரிவித்துள்ளார்.
இதேபோல் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர் ஆகியோருக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.