\
தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை - முதல்வர் பழனிசாமி ஆலோசனை

தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை - முதல்வர் பழனிசாமி ஆலோசனை

தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை - முதல்வர் பழனிசாமி ஆலோசனை
Published on

தென் தமிழகத்தில் அதிக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்

இந்த ஆலோசனையில் இதுவரை பெய்த பருவமழையின் அளவு, பாதிப்புகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புயல் பாதிப்புகளை பார்வையிட மத்தியக்குழு வரவுள்ள நிலையில் அவர்களிடம் தெரிவிக்கவேண்டிய விவரங்கள் குறித்தும் ஆலோசனையில் பேசப்படுவதாக தெரிகிறது.

மேலும் தற்போது தென் தமிழகத்தில் அதிக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, உதயகுமார், ஜெயக்குமார் ஆகியோரும் உள்ளனர். மேலும் அரசு அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com