\
மணல் கடத்தலை தடுக்க முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

மணல் கடத்தலை தடுக்க முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

மணல் கடத்தலை தடுக்க முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
Published on

மணல் கடத்தலை தடுப்பது, ஆன்லைன் மணல் விற்பனையில் நிலை குறித்து ஆட்சியர்கள் மற்றும் எஸ்பிக்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் ஆற்று மணல் கொள்ளை சம்பவம் நீண்ட கால பிரச்னையாக உள்ளது. அத்துடன் சமீபத்தில் மணல் தட்டுப்பாடு பிரச்னை ஏற்பட்டதால், ஆன் லைன் மூலம் மணல் விற்பனை செய்யும் முறையை அரசு அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் மணல் கடத்தலை தடுப்பது மற்றும் ஆன் லைன் மணல் விற்பனையின் தற்போதைய நிலை குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். 

சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சை, நாகை, பெரம்பலூர் உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்களும் மற்றும் புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை ஆகிய 5 மாவட்ட எஸ்பிக்களும் பங்கேற்றனர். இந்த ஆலோசனையின் போது மணல் கடத்தலை தடுப்பது குறித்து அறிவுரைகளை முதலமைச்சர் பழனிசாமி அதிகாரிகளுக்கு வழங்கினார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com