பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் : முதலமைச்சர் பழனிசாமி

பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் : முதலமைச்சர் பழனிசாமி

பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் : முதலமைச்சர் பழனிசாமி
Published on

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, கொரோனா தடுப்புக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவு தமிழகத்தில் இருப்பு உள்ளதாக கூறினார். சுகாதாரத்துறை உள்ளாட்சித் துறை எடுத்த நடவடிக்கைகளால் மதுரையில் கொரோனா குறைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

இன்னும் ஒரு மாதத்தில் ரூ.103 கோடியில் 500 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படவுள்ளதாகவும், கொரோனா நோயாளிகளை குணப்படுத்த, கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com