குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய முதல்வர், துணை முதல்வர்

குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய முதல்வர், துணை முதல்வர்
குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய முதல்வர், துணை முதல்வர்

முதலமைச்சர் ‌எடப்பாடி பழனிசாமி, குடும்பத்துடன் தனது சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினார். 

எடப்பாடியில் உள்ள கோயிலில், காலையில் பொங்கலிடச் சென்றபோது முதலமைச்சர் பழனிசாமிக்கு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குடும்பத்தினருடன் சேர்ந்து சாமி தரிசனம் செய்த முதலமைச்சர், விவசாயிகளுக்கு உற்ற தோழனாக இருக்கும் காளைகளுக்கு வாழைப்பழம் ஊட்டினார். அதனைத் தொடர்ந்து பொங்கல் விளையாட்டுப் போட்டிகளைப் பார்வையிட்ட அவர், சிறுது நேரம் சிலம்பம் விளையாடி மகிழ்ந்தார்.

இதேபோன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டம்‌ பெரியகுளத்தில்‌ உள்ள‌ த‌னது இல்லத்தில் குடும்பத்தினருடன் பொங்கலை கொண்டாடினார். பெரியகுளத்தில் உள்ள இல்லத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார். பின்னர் தனது உறவினர்கள், நண்பர்கள், மற்றும்‌ கட்சி தொண்டர்‌களுக்கு சர்க்கரைப் பொங்கல் ‌வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.

மேலும் தமிழகமெங்கும் பொங்கல் பண்டிகையை மக்கள் பாரம்பரியத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். தைத் திங்கள் முதல் நாளான பொங்கல் திருநாளை தமிழர்கள் மண் ‌மணம் மாறாமல்‌ உற்சாகமாக வரவேற்றனர். உழவர் திருநாளை மேலும் அழகாக்கும் வகையில் தமிழகத்தின் ‌பல்வேறு பகுதிகளிலும் மக்கள் வீட்டின் முன்பு வண்ணக் கோலங்களிட்டும், மாவிலைத் தோரணங்களை கட்டியும் பொங்கலை கொண்டாடினர். அதிகாலையிலேயே நீராடி, புத்தாடை அணிந்து புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கல் வைத்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com