திருச்சி விபத்து: முதலமைச்சர் ரூ.2 லட்சம் நிதியுதவி

திருச்சி விபத்து: முதலமைச்சர் ரூ.2 லட்சம் நிதியுதவி
திருச்சி விபத்து: முதலமைச்சர் ரூ.2 லட்சம் நிதியுதவி

திருச்சி அருகே விபத்தில் உயிரிழந்த எட்டு பேரின் குடும்பத்துக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த எஸ்.எஸ்.புதூரில் சரக்கு வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. கறி விருந்து நிகழ்ச்சிக்காக சென்ற அந்தச் சரக்கு வாகனத்தில் 22 பேர் பயணித்தனர். அப்போது வாகனத்தின் டயர் திடீரென்று வெடித்தது. இதனால் கடுப்பாட்டை இழந்த வாகனம் சாலை அருகே இருந்து நீரில்லாத கிணற்றுக்குள் பாய்ந்தது.

இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவர, மீட்புக்குழுவினருடன் விரைந்து வந்து கிணற்றில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் நிவாரண நிதியையும் அவர் அறிவித்திருக்கிறார். உயிரிழந்த எட்டு பேரின் குடும்பத்துக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் நிதி வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்படி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com