\
சட்டப்படியே டி.கே ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு: முதலமைச்சர் பழனிசாமி

சட்டப்படியே டி.கே ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு: முதலமைச்சர் பழனிசாமி

சட்டப்படியே டி.கே ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு: முதலமைச்சர் பழனிசாமி
Published on

டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு சட்டப்படியே பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

மூத்த காவல்துறை அதிகாரிகள் பலர் உள்ள நிலையில் டி.கே.ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு அளித்தது ஏன் என எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் பேரவையில் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு சட்டப்படியே பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அனுப்பிய 5 பேர் கொண்ட பட்டியலில் இருந்த ஒருவர்தான் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் விரைவில் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com