தமிழர்கள் பாரம்பரியத்தை காக்கும்வகையில் ஜல்லிக்கட்டு சட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது: முதலமைச்சர்

தமிழர்கள் பாரம்பரியத்தை காக்கும்வகையில் ஜல்லிக்கட்டு சட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது: முதலமைச்சர்
தமிழர்கள் பாரம்பரியத்தை காக்கும்வகையில் ஜல்லிக்கட்டு சட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது: முதலமைச்சர்

ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழர் பாரம்பரியத்தை காக்கும் வகையில் சட்டம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

சட்டமசோதாவைத் தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் பன்னீர்செல்வம், இந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டிருப்பதால், இதற்கு தடை விதிக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறினார். அப்போது பேசிய அவர் மத்திய அரசின் மிருகவதைத் தடுப்புச் சட்டத்தில் மாநில அளவிலான திருத்தம் கொண்டுவர சட்டவல்லுனர்களுடன் ஆலோசித்து முடிவு செய்ததாகத் தெரிவித்தார். மத்திய அரசின் சட்ட ஷரத்துகளுக்கு முரணாக மாநில அரசின் சட்டத்திருத்தத்தில் கருத்துகள் இருப்பினும், குடியரசுத் தலைவர் ஒப்புதல் இருப்பதால் இந்த சட்டத்துக்கு தடை விதிக்கப்பட வாய்ப்பு இல்லை. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டுக்கான அனைத்து தடைகளும் நீங்கியதாகவும் முதலமைச்சர் பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.

இதையடுத்து மசோதா மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் வரவேற்பு தெரிவித்ததுடன், இது முன்பே செய்திருக்கவேண்டிய ஒன்று என்றும் குறிப்பிட்டார். இதையடுத்து சட்டமசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com