\
முதலமைச்சர் ஊர் திரும்பவில்லை

முதலமைச்சர் ஊர் திரும்பவில்லை

முதலமைச்சர் ஊர் திரும்பவில்லை
Published on: 

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியைச் சந்திக்க டெல்லி சென்ற முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சென்னை திரும்பும் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டத்தினை பிறப்பிக்க பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். ஆனால், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் மத்திய அரசால் உடனடியாக ஒன்றும் செய்ய இயலாது என்று பிரதமர் மோடி கைவிரித்தார். பிரதமருடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர், தமிழக அரசின் நடவடிக்கை விரைவில் தெரியும். நல்லதே நடக்கும் பொறுமையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பிரதமரைச் சந்தித்த பின்னர் இன்றே சென்னை திரும்புவதாக இருந்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பயணம் தற்போது திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com