ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் நாளை சந்திக்கிறார்.
ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை நாளை காலை 10.30 மணியளவில் சந்திக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்க வலியுறுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரச் சட்டம் பிறப்பிக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.