முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், பண்டிகை நாட்கள் முடிந்த பிறகு, நவம்பர் 5, 6 ஆகிய தேதிகளில் கோவைக்குச் சென்று கள ஆய்வை தொடங்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மற்ற மாவட்டங்களிலும் கள ஆய்வுப் பணிகள் தொடரும் எனவும், திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்கள் தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசு சார்ந்த பணிகளை மட்டும்தான் கவனிப்பீர்களா என்ற தொண்டர்களின் மனக்குரலை நன்கு அறிவேன் எனவும் தெரிவித்துள்ளார்
மாவட்டங்களில் கள ஆய்வுப் பணிகளை நிறைவு செய்த பிறகு கட்சிப் பணிகளையும் ஆய்வு செய்வேன், திமுக தொண்டர்களை நேரில் கண்டு நெஞ்சம் மகிழ்வேன் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.