முதல்வர் முக ஸ்டாலின்
முதல்வர் முக ஸ்டாலின்web

“மனதில் பெரும் சுமையுடன் ஈரோடு இடைத்தேர்தல் அமைந்துவிட்டது..” – தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம்!

ஈரோடு இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை முதலமைச்சர் முக ஸ்டாலின் எழுதியுள்ளார்.
Published on

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதையடுத்து தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, டெல்லி சட்டப்பேரவை தேர்தலோடு சேர்த்து, பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 10 முதல் தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெற்றது.

ஈரோடு கிழக்கு தொகுதி
ஈரோடு கிழக்கு தொகுதி முகநூல்

இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளில் 3ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறுகிறது.

இந்த சூழலில் இதற்கு முன்னர் நடைபெற்ற இடைத்தேர்தலின்போது ஜனநாயக விரோத தேர்தலை நடத்தி திமுக வெற்றி பெற்றதாக எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, தேமுதிக, பாஜக முதலிய கட்சிகள் இடைத்தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளன.

முதல்வர் முக ஸ்டாலின்
1967... 1977... மீண்டும் 2026-ல்?- தவெக தலைவர் விஜய் கடிதம்..!

தொண்டர்களுக்கு முதல்வர் வைத்த கோரிக்கை..

எதிர்க்கட்சிகள் அனைத்தும் திமுக அரசை குற்றஞ்சாட்டி தேர்தலை புறக்கணித்த நிலையில், தொண்டர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் கடிதத்தில், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்களாக இருக்க வேண்டும். மக்களை சந்திக்கும் வலிமையற்ற அதிமுக, பாஜக வழக்கம்போல் அவதூறுகளை கூறுகின்றன. தமிழகத்திற்கு பாடுபடும் திமுக அரசையும் வஞ்சிக்கும் மத்திய அரசையும் மக்கள் அறிந்துள்ளனர்.

மனதில் பெரும் சுமையுடன் எதிர்கொள்ள வேண்டிய களமாக ஈரோடு இடைத்தேர்தல் அமைந்துவிட்டது. நானே நேரில் வந்து வாக்கு சேகரித்ததாக கருதி திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். அரசு மீது உள்ள நம்பிக்கை, ஆதரவை சிதைக்க நாளொரு அவதூறு, பொழுதொரு பொய் பரப்பப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

முதல்வர் முக ஸ்டாலின்
"மனித கழிவு கலந்த நீரை யாரும் குடிக்கவில்லை" - தமிழக அரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com