ஆம்ஸ்ட்ராங் படுகொலை|முதலமைச்சர் தலைமையில் சட்டம் - ஒழுங்கு ஆலோசனைக் கூட்டம்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில், சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 சட்டம் - ஒழுங்கு
சட்டம் - ஒழுங்கு புதிய தலைமுறை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில், சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், தலைமைச் செயலளர் ஷிவ்தாஸ் மீனா, உள்துறை செயலளர் அமுதா, டி.ஜி.பி., சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, தென் மாவட்டங்களில் அதிகரித்து வரும் கொலை சம்பவங்கள், இளைஞர்களிடம் அதிகரித்து வரும் போதைப் புழக்கம், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் என தமிழ்நாட்டில் தொடர்ந்து குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதாக தெரிகிறது

 சட்டம் - ஒழுங்கு
“குற்றம் செய்தோர் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவார்கள்”- ஆம்ஸ்ட்ராங் மனைவியிடம் முதல்வர் நேரில் உறுதி!

இந்நிலையில், தற்போது பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளது, மீண்டும் சட்டம் ஒழுங்கு தொடர்பான கேள்வியை எழுப்பியுள்ளது. இச்சம்பவம் காரணமாக, நேற்றையை தினம் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடியாக மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சட்டம் ஒழுங்கு ADGP ஆக இருந்த அருண் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தவகையில், தற்போது சட்டம் ஒழுங்கு ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com