“உயிரிழப்புகளைத் தடுக்க சில இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை” - முதலமைச்சர் ஸ்டாலின்

வெள்ளநீர் தேங்கியிருக்கும் நிலையில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும்தான் சில இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்புதிய தலைமுறை

கொளத்தூர், திரு.வி.க. நகர் மற்றும் எழும்பூர் தொகுதிகளில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நேற்று ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். பின்னர் இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

மிக்ஜாம் புயல் பாதித்த இடங்களில் நிவாரணப் பொருட்களை வழங்கிய முதல்வர்
மிக்ஜாம் புயல் பாதித்த இடங்களில் நிவாரணப் பொருட்களை வழங்கிய முதல்வர்

அதில் "வெள்ளநீர் தேங்கியிருக்கும் நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும்தான் சில இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை. மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் கவனத்தோடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமைச்சர்கள், அதிகாரிகள் முதல் கடைநிலைப் பணியாளர்கள் வரை அனைவரும் மக்களைப் பாதுகாக்கக் களத்தில் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். விரைவில் நிலைமை சீரடையும்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com