அண்ணா மற்றும் கலைஞர் நினைவிட திறப்பு விழா - பேரவையில் அழைப்பு விடுத்த முதல்வர்!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசிய பொழுது, “தாய் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய அறிஞர் அண்ணா அவர்களுடைய நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்புதிய தலைமுறை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபொழுது, “நின்ற தொகுதிகளிலெல்லாம் வென்ற தலைவன்... நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய தலைவன்... அப்படிப்பட்ட கலைஞர் அவர்களின் நினைவகம் முழுமை அடைந்துள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதுமட்டுமல்ல. தலைவரை உருவாக்கிய, நம்முடைய தாய் தமிழ்நாட்டுக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டிய பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களுடைய நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கட்ட அண்ணாவின் நினைவகமும், கலைஞரின் நினைவகமும் வருகிற 26 ஆம் தேதி மாலை 7 மணிக்கு திறக்கப்பட இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை குறிப்பிட்ட சொல்ல காரணம், அந்த நிகழ்வை விழாவாக கொண்டாட நாங்கள் விரும்பவில்லை. நிகழ்ச்சியாகவே கொண்டாட முடிவெடுத்திருக்கிறோம்.

இந்த நிகழ்ச்சிக்கு அவையில் இருக்கக்கூடிய ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சியினர், கூட்டணி கட்சியினர், தோழமைக் கட்சிகள் என அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று சபாநாயகர் மூலமாக கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களான உங்களுக்கும் இதன் மூலமாக அழைப்பு விடுத்து தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com