“பெண்களுக்கான திட்டங்களை வழங்குவதில் இந்தியாவுக்கே தமிழ்நாடு முன்னோடி” - முதல்வர் ஸ்டாலின்

இன்றும் நாளையும் நடைபெற உள்ள மூன்றாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று துவங்கி வைத்தார். தொடர்ந்து அவர் உரை நிகழ்த்தினார்.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் புதிய தலைமுறை

உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டின் சென்னையில், நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று துவங்கியது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த மூன்றாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை முதல்வர் மு.க. ஸ்டாலின் காலை 10 மணியளவில் துவங்கி வைத்தார்.

அப்போது உரை நிகழ்த்திய அவர் குறிப்பிட்டதாவது, “முதலீடு குவிய ஆட்சி மீது நல்லெண்ணம், சட்டம் ஒழுங்கு, உட்கட்டமைப்பு அவசியம். அப்படி ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகுதான் தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகின்றன. தற்போது தமிழக பொருளாதாரம் அதிவிரைவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மேலும் நாளைய தொழில் மாற்றங்களை கணித்து வைத்துள்ளோம்.

சென்னையில் காலையில் இருந்தே மழை பெய்தது கொண்டிருக்கிறது. அதேபோன்று முதலீடும் மழையாக பெய்யும் என நம்புகிறேன். இந்திய பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்ல பெண்களுக்கான திட்டங்களை வழங்குவதில் இந்தியாவுக்கே தமிழகம் முன்னோடியாக உள்ளது.

முதல்வர் ஸ்டாலின்
“உலகிலேயே முதலீடு செய்ய சிறப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”- உலக முதலீட்டாளர் மாநாட்டில் மத்திய அமைச்சர்

மேலும் பெரியார், அண்ணா, கலைஞரை தொடர்ந்து சமூக, பொருளாதார அரசியல் முன்னேற்றத்தில் பெண்களை முன்னிறுத்தி வருகிறோம். ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் 200க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

இந்தவகையில் தமிழ்நாட்டில் முதலீடு செய்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் அனைவரையும் தமிழ்நாடு அரசு மதிக்கும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com