”தமிழ்நாட்டில் இருப்பதைப் போல் உணர்கிறேன்” - சிங்கப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சிங்கப்பூர் தமிழ் அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சிங்கப்பூருக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான தொடர்பு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்டது என்று தெரிவித்தார்.

தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈர்க்கவும், சென்னையில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் 9 நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள்
சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள்PT

இந்நிலையில் சிங்கப்பூர் சென்றுள்ள முதலைமச்சர் மு.க.ஸ்டாலின், இன்று சிங்கப்பூர் தமிழ் அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com