கொரோனா நிதிக்கு திமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒருமாத ஊதியம் வழங்குவர் - மு.க. ஸ்டாலின்

கொரோனா நிதிக்கு திமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒருமாத ஊதியம் வழங்குவர் - மு.க. ஸ்டாலின்

கொரோனா நிதிக்கு திமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒருமாத ஊதியம் வழங்குவர் - மு.க. ஸ்டாலின்
Published on

கொரோனா நிவாரண நிதிக்கு திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஒருமாதம் ஊதியத்தை வழங்குவார்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் மிகத்தீவிரமாக உள்ள நிலையில், சிகிச்சை மருந்து, ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் தடுப்பூசி என அனைத்திலும் தட்டுப்பாடுகளை சந்தித்துவருகிறது. இந்த கடின காலகட்டத்தில் முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலின் பல கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்தி வருவதாக உயர் நீதிமன்றமும் பாராட்டுகளை தெரிவித்திருந்தது. இந்நிலையில் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர்கள் சூர்யா, அஜித் உட்பட பலரும் நிதி வழங்கிவருகின்றனர். 

அதனைத் தொடர்ந்து, திமுக அறக்கட்டளை சார்பில் ஏற்கெனவே ரூ. 1 கோடி நிதி அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அக்கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்கள் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தங்கள் ஒருமாத ஊதியத்தை அளிப்பர் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com