ஆதரவாளர்களுடன் பங்கேற்ற ஓபிஎஸ்.. ஆப்சென்ட் ஆன இபிஎஸ்.. ஆளுநர் தேநீர் விருந்து.. முழுதகவல்

ஆதரவாளர்களுடன் பங்கேற்ற ஓபிஎஸ்.. ஆப்சென்ட் ஆன இபிஎஸ்.. ஆளுநர் தேநீர் விருந்து.. முழுதகவல்
ஆதரவாளர்களுடன் பங்கேற்ற ஓபிஎஸ்.. ஆப்சென்ட் ஆன இபிஎஸ்.. ஆளுநர் தேநீர் விருந்து.. முழுதகவல்

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் தேநீர் விருந்து நடைபெற்றது. இந்த விருந்தில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றிருந்தார். இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு சால்வை அணிவித்து காந்தி சிலையை பரிசாக அளித்தார்.

இந்த தேநீர் விருந்தில் அனிதா ராதாகிருஷ்ணன், மெய்யநாதன், பழனிவேல் தியாகராஜன், மதிவேந்தன், காந்தி, மா.சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி, தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சக்கரபாணி, பெரிய கருப்பன் ஆகிய திமுக அமைச்சர்களும், எம்.பிக்கள் கலாநிதி வீராசாமி, தயாநிதிமாறன், பாரிவேந்தர் ஆகியோரும் பங்கேற்றனர்.

அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளரான வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியனும் தேநீர் விருந்தில் பங்கேற்றனர். விருந்து நிகழ்ச்சிக்கு வரும் முன்பு ஆளுநர் ஆர்.என்.ரவியை ஓ.பன்னீர்செல்வம் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியிருந்தார்.

அத்துடன், இயக்குநர் வசந்தபாலன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி, கவிஞர் வைரமுத்து உட்பட பலரும் பங்கேற்றிருக்கும் ஆளுநரின் தேநீர் விருந்தை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அவரது ஆதரவாளர்களும் விருந்தில் பங்கேற்கவில்லை. விருந்தை அவர்கள் புறக்கணித்தார்களா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

அதேவேளையில் தமிழக பாஜக சார்பில் எம் என் ராஜன் நாராயணன், திருப்பதி தவிர, பாஜகவின் எம்.எல்.ஏக்கள் யாருமே பங்கேற்கவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com