\
தா.பாண்டியனிடம் முதலமைச்சர் நலம் விசாரிப்பு

தா.பாண்டியனிடம் முதலமைச்சர் நலம் விசாரிப்பு

தா.பாண்டியனிடம் முதலமைச்சர் நலம் விசாரிப்பு
Published on

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனை முதலமைச்சர் பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 28-ஆம் தேதி ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஏற்கெனவே நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்நிலையில் இன்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் பழனிசாமி, தா.பாண்டியனின் உடல்நலம் குறித்து அவரிடம் நேரில் கேட்டறிந்தார்.

முன்னதாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியையும் முதலமைச்சர் பழனிசாமி நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதி நலமுடன் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com