\
புதிய பேருந்து சேவை: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

புதிய பேருந்து சேவை: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

புதிய பேருந்து சேவை: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
Published on

சேலத்தில் புதிய வழித்தடத்தில் இரண்டு பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சேலம் ஜங்சனில் இருந்து புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், குகை, சீலநாயக்கன்பட்டி பைபாஸ் வழியாக அயோத்தியா பட்டிணம் வரையிலான புதிய வழித்தடத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் இரண்டு பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். திருவாக்கவுண்டனூர் பைபாசில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். இந்த பேருந்துகளால் 50ஆயிரம் பயணிகள் பயனடைவார்கள் என்று அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com