தமிழ்நாடு
தமிழ்த்தாத்தா உ.வே.சா.வின் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை
தமிழ்த்தாத்தா உ.வே.சா.வின் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை
தமிழ்த்தாத்தா என்று போற்றப்படும் உ.வே.சாவின் 163-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் உள்ள உ.வே.சாவின் திருவுருவச்சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், வளர்மதி உள்ளிட்ட அமைச்சர்களும் உ.வே.சாவுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிளும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.