தமிழ்நாடு
மணப்பாடு படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு
மணப்பாடு படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு
படகு விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், படகு விபத்தில் 10 பேர் உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்ததாக தெரிவித்திருக்கிறார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, தலா 2 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டிருப்பதாகவும், சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தி இருப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். காயமடைந்த 11 பேருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி, அவர்களுக்கு உயர்சிகிச்சை அளிக்க அறிவுறுத்தி உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.