\
“உலக படங்களுக்கு நிகராக தமிழ் படங்கள் இருப்பது மகிழ்ச்சி” - முதலமைச்சர் பழனிசாமி

“உலக படங்களுக்கு நிகராக தமிழ் படங்கள் இருப்பது மகிழ்ச்சி” - முதலமைச்சர் பழனிசாமி

“உலக படங்களுக்கு நிகராக தமிழ் படங்கள் இருப்பது மகிழ்ச்சி” - முதலமைச்சர் பழனிசாமி
Published on

குடும்பத்தோடு திரையரங்கம் சென்று படம் பார்த்து சிரிக்கும்போது கவலைகள் பறந்து போவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “அறிமுக இயக்குனர்களை கொண்டு வெற்றிப் படங்களை கொடுத்த ஐசரி கணேஷ்க்கு வாழ்த்துக்கள். உலக படங்களுக்கு நிகராக தமிழ் படங்கள் தயாரிக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 

எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும், குடும்பத்தோடு திரையரங்கம் சென்று படம் பார்த்து சிரிக்கும் போது கவலைகள் பறந்து போகிறது. மக்களை நெறிமுறை படுத்த திரைத்துறையை பயன்படுத்தியவர்கள் நம் தலைவர்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா தான்” என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com