\
“பிரணாப் முகர்ஜி குணமடைய வேண்டுகிறேன்” - முதலமைச்சர் பழனிசாமி

“பிரணாப் முகர்ஜி குணமடைய வேண்டுகிறேன்” - முதலமைச்சர் பழனிசாமி

“பிரணாப் முகர்ஜி குணமடைய வேண்டுகிறேன்” - முதலமைச்சர் பழனிசாமி
Published on

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விரைவில் குணமடைய வேண்டுவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டெல்லி ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மூளையில் இருந்த சிறிய அளவிலான கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் பிரணாப் முகர்ஜி விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விரைவில் குணமடைய நான் வேண்டிக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com