\
மண்ணின் மைந்தர் மாரியப்பனுக்கு வாழ்த்துகள் : முதலமைச்சர் பழனிசாமி

மண்ணின் மைந்தர் மாரியப்பனுக்கு வாழ்த்துகள் : முதலமைச்சர் பழனிசாமி

மண்ணின் மைந்தர் மாரியப்பனுக்கு வாழ்த்துகள் : முதலமைச்சர் பழனிசாமி
Published on

மண்ணின் மைந்தர் மாரியப்பனுக்கு என் வாழ்த்துகள் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆண்டு தோறும் ஹாக்கி வீரர் தயான் சந்த் பிறந்த நாளை முன்னிட்டு கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரர் மாரியப்பன், கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா உள்ளிட்ட விளையாட்டு வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இதில் மாரியப்பன், ரோகித் ஷர்மா உட்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி, “கேல் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ள, உலக அளவில் பாரா தடகள போட்டிகளில் பல சாதனைகள் புரிந்த, நம் மண்ணின் மைந்தர் மாரியப்பன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com