தமிழ்நாடு
இந்தியாவை வல்லரசாக்க உழைக்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி
இந்தியாவை வல்லரசாக்க உழைக்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி
இந்தியாவை வல்லரசாக்க அனைவரும் உழைக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் 72வது சுதந்திர தினவிழா நாளை கொண்டாப்பட உள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், விடுதலைப் போராட்ட தியாகிகளை பெருமைப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் அவர்களின் பிறந்த நாளன்று தமிழக அரசின் சார்பில் விழாக் கொண்டாடப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
மேலும், இந்தியாவை வல்லரசாக்கவும், தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றவும் அனைவரும், சாதி, மத, பேதங்களைக் கடந்து ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.