\
“ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்” - முதலமைச்சர் பழனிசாமி

“ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்” - முதலமைச்சர் பழனிசாமி

“ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்” - முதலமைச்சர் பழனிசாமி
Published on: 

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னையில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, 2021ஆம் ஆண்டிலும் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்றார். அதிமுகவில் 1 லட்சம் முதல்வர்கள் உள்ளனர் என்றும், ஒரு முதல்வரின் பணிகளையே தாங்கிக்கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஒரு லட்சம் முதல்வர்களின் பணிகளை தாங்கிக்கொள்ள முடியுமா என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படமாட்டாது என்றும், மத்திய அரசின் திட்டங்களில் ஆதரிக்க வேண்டியதை ஆதரிப்போம், எதிர்க்க வேண்டியதை எதிர்ப்போம் என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com