சிட்லபாக்கம் ஏரியை சீரமைக்க ரூ25 கோடி - 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு

சிட்லபாக்கம் ஏரியை சீரமைக்க ரூ25 கோடி - 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு
சிட்லபாக்கம் ஏரியை சீரமைக்க ரூ25 கோடி - 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு

குளிர்பதனக்கிடங்கு, நவீன அரி‌சி ‌ஆலை, சிறப்பு அங்காடிகள் என விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி‌ பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் விவசாயிகளின் நலன் கருதி, உ‌யர் தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன இயந்திரங்களைக் கொண்‌டு தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் தினசரி 100 மெட்ரிக் டன் அரவைத் திறனுடன் கூடிய நவீன அரிசி ஆலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். 

தரும‌புரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்தில் விவசாயப் பொருட்களை பாதுகாப்பான முறையில் சேமித்து வைத்திட 3 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் சூரிய மின்சக்தியுடன் கூடிய குளிர்சாதனக் கிடங்கு அமைக்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் சிட்லபாக்கம் ஏரியை சீரமைக்குப் பொருட்டு, ஆக்கிரமிப்பை அகற்றுதல், உபரி நீர் வீணாவதைத் தவிர்த்தல் போன்ற பணிகள் 25 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

மேலும் தமிழகம் முழுவதும் 113 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கிளைகள் உள்பட 125 கூட்டுறவு நிறுவனங்களுக்கு ரூ.36.41கோடியில் சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும் எனவும் மாநிலம் முழுவதும் அம்மா சிறு கூட்டு‌றவு சிறப்பு அங்காடிகள் திட்டத்தை விரிவுபடுத்தி 582 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள், 5 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக தொடங்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இவைதவிர, வனப்பகுதியில் பணிபுரியும் வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர தொகுப்பூதியம் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 12 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்த‌ப்படும் என்பன உள்ளிட்ட மேலும் சில அறிவிப்புகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com