தமிழ்நாடு
டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை
டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை
டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சேலத்தில் முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி, சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் கனகராஜ், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி, மாநகராட்சி ஆணையர் சதீஷ் மற்றும் அரசு அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சலை ஒழிக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் அப்போது கேட்டறிந்தார்.