ரூ.1000 கோடியில் கட்டப்படும் தடுப்பணைகள் : நெல்லையில் முதல்வர் பேட்டி
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளை முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்தார்.
நெல்லையில் ரூ.196.75 கோடியில் முடிந்த திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். அத்துடன் தென்காசி மாவட்டத்துக்கான ரூ.78.77 கோடி மதிப்பிலான திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இதையடுத்து இரு மாவட்டங்களுக்குமான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அத்துடன் இரண்டு மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் விளக்கமளித்து பேசிய வரும் முதலமைச்சர், கொரோனா பொதுமுடக்கத்தால் தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுத்ததாக கூறினார். தாமிரபரணி-கருமேனியாறு இணைப்புத் திட்டத்தின் தாமதத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணியே காரணம் என குறிப்பிட்டார். மேலும், ரூ.1000 கோடி செலவில் பல்வேறு பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்படுவதாக தெரிவித்தார்.

