காட்டுத்தீயை தடுத்து வனத்தை காக்க அதிரடிப்படை- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

காட்டுத்தீயை தடுத்து வனத்தை காக்க அதிரடிப்படை- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

காட்டுத்தீயை தடுத்து வனத்தை காக்க அதிரடிப்படை- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
Published on

வனத்தில் ஏற்படும் தீயை ‌கட்டுப்படுத்தி, விலங்குகள் வெளிவரா வண்ணம் பாதுகாக்கும் வகையில் அதிரடிப்படை உருவாக்கப்படும் ‌என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சிறப்பு‌ வனக்காவல் பணியமைப்பு மற்றும் தீத்தடுப்பு அதிரப்படை என்ற திட்டத்திற்காக 23 கோடியே 26 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி கூறியிருக்கிறார். இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் யானைகள் காடுகளை விட்டு வெளியேறுவதை தடுக்க தருமபுரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் எஃகு கம்பிகளுடன் கூடிய சிமெண்ட் கான்கிரீட் தூண்களை நிறுவி, 5 அடுக்கு கம்பி வேலிகள் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வேளச்சேரியில் புதிதாக கட்டப்படும் வனத்துறை தலைமை அலுவலக உள்கட்டமைப்புக்கு 22 கோடியே 75 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 11 கோடியே 50 லட்சத்தில் விலங்குகள் உலாவிட உலகம் அமைக்கப்பட உள்ளது.

மேலும், சுற்றுச்சூழல், பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பிலும் விதி எண் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். இதற்கிடையே தமிழகத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியது குறித்து, சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com