\
பொங்கல் பரிசை அறிவித்தார் முதலமைச்சர் பழனிசாமி

பொங்கல் பரிசை அறிவித்தார் முதலமைச்சர் பழனிசாமி

பொங்கல் பரிசை அறிவித்தார் முதலமைச்சர் பழனிசாமி
Published on

பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பொங்கல் பரிசை அறிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பரிசு அறிவிக்கப்படும். ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு துண்டு, முந்திரி, திராட்சை தலா 20 கிராம் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கலை முன்னிட்டு 1.84 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் ரூ.210 கோடி செலவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com