தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் குறைக்கப்படவில்லை: முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் குறைக்கப்படவில்லை: முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் குறைக்கப்படவில்லை: முதல்வர் பழனிசாமி
Published on

தமிழகத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய கொரோனா பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனையில் முதல்வர், ‘’ கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. நாட்டிலேயே கொரோனா பரிசோதனைக்கான ஆய்வகம் அதிகம் அமைக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. பிற மாநிலங்களில் கொரோனா பரிசோதனையை குறைத்தாலும் தமிழகத்தில் குறைக்கப்படவில்லை.

சென்னையை பொருத்தவரை, ஒவ்வொரு மண்டலத்திற்கும் அமைச்சர் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தைப்போல் பிற மாநிலங்களும் ஆர்டி-பிசிஆர் சோதனையை நடத்தவேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.

தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,629 ஆக குறைந்துள்ளது’’ என்று பேசியதுடன், சிறு, குறு தொழில்கள் முன்னேற தமிழகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆட்சியர்களிடம் எடுத்துக் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com