கதிராமங்கலத்தில் கைது, தடியடி ஏன்?: முதல்வர் விளக்கம்

கதிராமங்கலத்தில் கைது, தடியடி ஏன்?: முதல்வர் விளக்கம்

கதிராமங்கலத்தில் கைது, தடியடி ஏன்?: முதல்வர் விளக்கம்
Published on

கதிராமங்கலம் கிராம மக்கள், கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டதால், அவர்கள் மீது குறைந்த அளவு பலப்பிரயோகம் செய்து கலைந்து போகச் செய்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பேரவையில் விளக்கமளித்துள்ளார். 

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த 30ம் தேதி நடைபெற்ற வன்முறை குறித்து திமுக கொண்டு வந்த சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விளக்கமளித்தார். அப்போது, கதிராமங்கலம் கிராமத்தில் 01.06.2001 முதல் ஓஎன்ஜிசி நிறுவனம், சுரங்க குத்தகை உரிமத்தின் அடிப்படையில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதுநாள் வரையில் அங்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் பணிகள் நடைபெற்று வந்தது. கதிராமங்கலத்தைச் சேர்ந்த கிராம மக்கள் 150 பேர், அவ்விடத்தின் அருகே கூடி, சாலையில் அமர்ந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக அதிகாரிகளை அவ்விடத்திற்கு செல்லவிடாமல் தடுத்ததுடன் மாவட்ட ஆட்சியர் நேரில் வர வேண்டும் என்று வலியுறுத்தினர். அதிகாரிகள் எடுத்துக்கூறியும் கேட்காமல், சாலையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் உள்ளிட்டவற்றிற்கு தீ வைத்ததுடன், அவர்களில் சிலர் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்கினர்.  தாக்குதலில் காவல் ஆய்வாளர் மற்றும் இரு காவலர்கள் கதிராமங்கலத்தைச் சேர்ந்த ஒருவரும் காயமடைந்ததோடு, காவல்துறைக்குச் சொந்தமான வாகனமும் சேதமைடந்தது. கிராமத்தினரை அமைதியாக கலைந்து போகுமாறு காவல்துறையினர் வலியுறுத்தியும், அவர்கள் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டதால் குறைந்த அளவு பலப்பிரயோகம் செய்து அவர்களை கலைந்து போகச் செய்தனர். இதுதொடர்பாக 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது. கதிராமங்கலம் கிராமத்தில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிலைமை அமைதியாக இருக்கிறது என அவர் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com