minister ragupathy epspt desk
தமிழ்நாடு
”இஸ்லாமிய சிறை கைதிகளின் வழிபாட்டு உரிமைகளை பறிப்பதா?”-இபிஎஸ்-ன் கேள்வியும், சட்ட அமைச்சரின் பதிலும்
வேலூர் மத்திய சிறையில் மசூதியை மூடிவைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ள நிலையில், எந்த சிறையிலும் இறை வழிபாட்டுக்கு தனி ஏற்பாடுகள் செய்யப்படுவது கிடையாது என அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார்.
கொரோனா நோய்த் தொற்றுக்குப் பிறகு ஏதோ ஒரு காரணத்துக்காக இஸ்லாமிய சிறைவாசிகள் தொழுகை நடத்தும் மசூதியை மட்டும் திறக்காமல் மூடி வைத்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
prayerpt desk
இதனால், வேலூர் சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, தமிழக சிறைகளில் உள்ள இஸ்லாமிய கைதிகள், அவர்களுடைய மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு வழிவகுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சிறைpt desk
எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, எந்த சிறையிலும் இறை வழிபாட்டுக்கு தனி ஏற்பாடுகள் செய்யப்படுவது கிடையாது என தெரிவித்துள்ளார்.