ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு 500 மதுக்கடைகள் இன்று மூடல்

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு 500 மதுக்கடைகள் இன்று மூடல்

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு 500 மதுக்கடைகள் இன்று மூடல்
Published on

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 500 டாஸ்மாக் கடைகளும், 169 மதுபான பார்களும் இன்று முதல் மூடப்பட உள்ளன.

அதன்படி சென்னை மண்டலத்தில் அடங்கும் காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் உள்ள 105 டாஸ்மாக் கடைகளும், 63 மதுபான பார்களும் மூடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கோவை மண்டலத்தில், நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் உள்ள 44 டாஸ்மாக் கடைகளும், 20 மதுபான பார்களும் மூடப்படுகின்றன. மதுரை மண்டலத்தை சேர்ந்த திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் , சிவகங்கை, திருநெல்வேலி , தூத்துக்குடி , கன்னியாகுமரி, தேனி ஆகிய பகுதிகளில் மொத்தம் 99 டாஸ்மாக் கடைகளும், 37 மதுபான பார்களும் மூ‌டப்படுகின்றன.

சேலம் மண்டலத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, அரக்கோணம் ஆகிய பகுதிகளில் உள்ள 133 டாஸ்மாக் கடைகளும், 26 மதுபான பார்களும் மூடப்படுகின்றன. திருச்சி மண்டலத்திற்குட்பட்ட தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை , கரூர், கடலூர் , திருவாரூர் , விழுப்புரம், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் உள்ள 199 டாஸ்மாக் கடைகளும், 23 மதுபான பார்களும் மூடப்படுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com