ஆன்லைன் குளறுபடிகளை அம்பலப்படுத்திய பத்திர பதிவு எழுத்தர்

ஆன்லைன் குளறுபடிகளை அம்பலப்படுத்திய பத்திர பதிவு எழுத்தர்
ஆன்லைன் குளறுபடிகளை அம்பலப்படுத்திய பத்திர பதிவு எழுத்தர்

திருப்பூரில் அரசு கட்டடங்கள் உள்ள இடத்தை விற்பனை செய்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த நபருக்கு, அதிகாரிகள் எந்தத் தகவலையும் சரி பார்க்காமல் ஒப்புதல் வழங்கியுள்ளனர். 

தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவு அலுவலகங்களிலும் ஆன்லைன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடு, நிலங்கள் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்கள் இடைத்தரகர்களை அணுக சார்பதிவாளர்களே வலியுறுத்துவதாக புகார்கள் வந்தன. நேரடியாக பத்திரப்பதிவு செய்ய வரும் பொது மக்களை, பல்வேறு காரணங்களை கூறி திருப்பி அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் நலன் கருதி ஆன்லைன் மூலம் பத்திர பதிவு செய்யும் முறையை பிப்ரவரி 12ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பொதுமக்கள் சிரமமின்றி பத்திரப்பதிவு செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.ஆனால் இதில் அதிகாரிகள் அலட்சியாக செயல்படுவதாக பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆன்லைன் பத்திர பதிவு முறையில் அதிகாரிகள் அலட்சியமாக‌ செயல்படுவது பத்திர எழுத்தர் சிவசங்கர் எடுத்த மு‌யற்சியில் தெரியவந்துள்ளது. 

சிவசங்கர் திருப்பூரில் உள்ள நிலத்தை விற்பதற்கு பொள்ளாச்சி சார்பதிவு அலுவலகத்தில் ஆன்லைன் மூலம்  விண்ணப்பித்துள்ளார். அதிகாரிகளும் விற்பனைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர். இவர் விண்ணப்பித்தது உடுமலை சார்பதிவாளர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், குற்றவியல் நீதிமன்றம், கிளை சிறை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள இடங்கள். அவை அரசு நிலம் என்பதையும், கட்டடம் உள்ள இடத்தை காலி இடம் என குறிப்பிடப்பட்டுள்ளதையும் கவனிக்காத அதிகாரிகள் விற்பனைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர். விற்பதாக குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து இடங்களும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது. அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டதோ பொள்ளாச்சி சார்பதிவாளர் அலுவலகம்,‌அதைக்கூட அதிகாரிகள் சரிபார்க்கவில்லை என்கிறார் பத்திர எழுத்தர் சிவசங்கர். இது குறித்து மாநில பத்திரப்பதிவாளருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com