குடிசைமாற்று குடியிருப்பில் தூய்மை பணியாளருக்கு கொரோனா : அச்சத்தில் மக்கள்

குடிசைமாற்று குடியிருப்பில் தூய்மை பணியாளருக்கு கொரோனா : அச்சத்தில் மக்கள்
குடிசைமாற்று குடியிருப்பில் தூய்மை பணியாளருக்கு கொரோனா : அச்சத்தில் மக்கள்

பெரும்பாக்கம் குடிசை மாற்று பகுதி குடியிருப்பில் வசிக்கும் தூய்மைப் பணியாளருக்கு கொரோனா உறுதியானதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரும்பாக்கம் பகுதியில் அருகருகே 35க்கும் அதிகமான குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் அமைந்துள்ளன. ஒரு குடியிருப்பில் 8 தளங்களும், தளத்திற்கு 24 வீடுகளும் அமைந்துள்ளன. ஒரு தனி அறை மட்டுமே கொண்ட இவ்வீடுகளில் சராசரியாக நான்கில் இருந்து ஆறு நபர்கள் வரை வசிக்கின்றனர். குறைந்த இடைவெளியில் அதிக நபர்கள் வசிப்பதே கொரோனா பரவ முக்கிய காரணமாக கூறப்படும் நிலையில், இங்கு யாருக்கேனும் கொரோனா பாதித்தால் அதிவேகத்தில் பரவ வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.

இந்நிலையில் பெரும்பாக்கம் குடியிருப்பில் வசிக்கும் துப்புரவு பணியாளர் ஒருவருக்கு கொரோன வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள நபர் சிகிச்சையில் உள்ள நிலையில், அவர் தங்கி இருந்த குடியிருப்பு தனிமைப்படுத்தபட்டு, அவருடன் தொடர்பில் இருந்த குடியிருப்புவாசிகள் 40 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்கொண்டு அனைவருக்கும் பரிசோதனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. குடியிருப்பில் இருந்து யாரும் வெளியே செல்லாத வகையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. அத்யாவசியப் பொருட்கள் இப்பகுதிக்கே வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு முறை கிருமிநாசினிகள் தெளிக்கவும், குடியிருப்புகளின் முன்பு பேரல்களில் கை மற்றும் கால்களை சுத்தம் செய்து கொள்ள கிருமி நாசினியும் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com