தமிழ்நாடு
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தூய்மைப் பணி முகாம் தொடக்கம்
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தூய்மைப் பணி முகாம் தொடக்கம்
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்ற தூய்மைப் பணி முகாமை நிர்வாக நீதிபதி வேணுகோபால் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், நிஷா பானு, ஜெகதீஷ் சந்திரா, பவானி சுப்பராயன், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், நீதிமன்றப் பணியாளர்கள், மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி வேணுகோபால், நோய்கள் பரவுவதை கட்டுப்படுத்த தூய்மை அவசியம் என தெரிவித்தார். மதுரை உயர்நீதிமன்ற வளாகத்தை தூய்மை மற்றும் பசுமை வளாகமாகவும் மாற்றும் நோக்கில் இந்த முகாம் நடைபெறுவதாகவும் கூறினார்.