\
ஆசிரியர்கள் அவமானப்படுத்தியதால் 9 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை

ஆசிரியர்கள் அவமானப்படுத்தியதால் 9 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை

ஆசிரியர்கள் அவமானப்படுத்தியதால் 9 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை
Published on

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 9 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவனை பள்ளி ஆசிரியர்கள் சக மாணவர்கள் முன்னிலையில் திட்டி அவமானப்படுத்தியதால் மனமுடைந்த அந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சேலம் சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த மாணவர் நந்தகுமார் மாங்காட்டில் உள்ள அரசுப் பள்ளியில் படித்துவந்தார். 9 ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 10 ஆம் வகுப்பில் கடந்த 2 நாட்களாக அமர்ந்திருக்கிறார். அப்போது ஆசிரியர்கள், நந்தகுமாரை அழைத்துச் சென்று மற்ற மாணவர்களிடம் இவர் தோல்வி அடைந்த மாணவர் என்றும், இவரைப் போல இருந்தால் உங்களையும் ஃபெயில் ஆக்கிவிடுவோம் என்றும் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த நந்தகுமார், விஷம் அருந்தி இருக்கிறார். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார். மாணவர் நந்தகுமார் உயிரிழக்கக் காரணமான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நந்தகுமாரின் உறவினர் செல்வி பேசும்போது, “நந்தகுமாரை 4 வகுப்புகளுக்கு அழைத்துச் சென்று, ஒழுங்காகப் படிக்கவில்லை என்றால் இவனைப் போல ஃபெயிலாக்கிவிடுவோம் என்று கூறியுள்ளனர். அந்த மனவருத்தம் தாங்க முடியாமல் விஷம் குடித்துவிட்டார். இதற்கு அந்த பள்ளி ஆசிரியர்கள்தான் காரணம். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com