பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் - கயிறு சாகசத்தின் போது தவறி விழுந்த மாணவி

பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் - கயிறு சாகசத்தின் போது தவறி விழுந்த மாணவி

பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் - கயிறு சாகசத்தின் போது தவறி விழுந்த மாணவி
Published on

சத்தீஸ்கரில் பள்ளில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 4ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி 3வது மாடியில் இருந்து விழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கர்திஷா என்ற சிறுமி 4ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்தப் பள்ளியில் கடந்த செவ்வாய் கிழமை அன்று சாகச நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் கர்திஷாவும் பங்கேற்றிருக்கிறார். அப்போது பள்ளியின் மூன்றாவது மாடியிலிருந்து கயிறு மூலம் தொங்கிச்செல்லும் சாகச நிகழ்ச்சிக்கு சிறுமியை பள்ளி நிர்வாகம் தயார் செய்து அனுப்பியுள்ளது. சிறுமி பயத்தில் மறுத்துள்ளார்.

ஆனால் அவருக்கு தைரியம் கூறி கயிற்றில் அனுப்பியுள்ளனர். அப்போது எதிர்பாரத விதமாக கயிறு அறுந்து சிறுமி கீழே விழுந்துள்ளார். அருகே இருந்த சிறுமி தாய் உடனே சிறுமியை ஓடி தூக்கியுள்ளார்.

பல இடங்களில் எலும்புகள் முறிந்த சிறுமி, மயக்க நிலைக்கு சென்றுள்ளார். இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த விவகாரத்தை பள்ளி நிர்வாகம் மூடி மறைக்க முயன்றதாக தெரிகிறது. ஆனால் சிறுமியின் பெற்றோர் ஊடகத்தினரை சந்தித்ததும், விவகாரம் பூதாகரமானது.

இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு ராய்பூர் ஆட்சியர் பாரதிதாசனுக்கு அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாஹெல் உத்தரவிட்டுள்ளார். விசாரணையின் அடிப்படையில் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. போதிய பாதுகாப்பின்றி சிறுமியை கயிற்றில் கட்டி அனுப்பியதே விபத்திற்கு காரணம் என பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com